பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

நவரசப் பதிவு
சுமைதாங்கி :
sumaithangiIrungalakurichi sumaithangiPadaivetti-Kudikadu

பண்டைய கால தமிழர்களின் பாரம்பரிய பண்பாடுகளில் ஒன்றுதான் சுமைதாங்கி.

சுமைதாங்கி என்பது கர்பிணிப் பெண்கள் மகப்பேறு காலத்தில் குழந்தை பிரசவத்தின்போது இறந்துவிட்டால் அந்த தாயின் நினைவாக சுமைதாங்கி கல்லை நட்டு வைப்பார்கள். அதாவது தன் சுமையை இறக்கி வைக்க முடியாத அத்தாயின் நினைவாக அவரது உறவினர்கள் நடந்து சுமை தூக்கி செல்வோர்கள் அவரது சுமையை இறக்கிவைத்து இளைப்பாருவதற்காக சுமை தாங்கி கல்லை நட்டு வைத்தார்கள்.

அந்த கல்லில் கர்பிணித் தாயின் பெயர் மற்றும் இறந்த தேதியை பொறித்து வைப்பார்கள். இன்றைய தலைமுறையினர் சிலர் அந்த நினைவுசின்னத்தை சிதைத்து விடுகிறார்கள். காலத்தால் அழிக்கக் கூடாத ஒரு வரலாற்று பெட்டகம் தற்போது காணாமல் போய் வருகிறது.

இதுபோன்று ஒவ்வொரு ஊரிலும் உள்ள சுமைதாங்கி கல்லினை அவ்வூரில் உள்ளோர்கள் பாதுகாத்து வருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இச்சுமைதாங்கி பற்றி கவிதை வரவேற்கப்படுகிறது. கவிதையினை சுருக்க நவரச பதிப்பிற்கு உரிமை உண்டு. எங்களின் மின்னஞ்சல் முகவரி rakes007vpm@yahoo.in.

Copyright 2017 © Reserved, Tamilnavarasam Visitor Counter. Website designed by Glad India Technologies Pvt. Ltd.,