'கவியரசு' முடியரசன்
கவியரசு முடியரசன் (அக்டோபர் 7, 1920 - டிசம்பர் 3, 1998) தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சுப்பராயலு-சீதாலக்ஷ்மி என்பார்க்கு அக்டோபர் 7, 1920-இல் பிறந்தவர். துரைராசு என்ற இவரது பெயரை முடியரசன் என்று மாற்றிக் கொண்டார்.
பாரதிதாசனோடு மிக நெருங்கிப் பழகி அவருடைய முற்போக்கு எண்ணங்களை ஏற்றுப் பாடியவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். சடங்குகளை மறுப்பவர். இவரது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்று வலியுறுத்தி அவ்வாறே நிறைவேறச் செய்தவர். காரைக்குடி மீ. சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர்.