பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

ஸ்ரீகுமரகுருபரர்

ஒன்பது கைலாசங்களும் ஒன்பது திருப்பதிகளும் தன் கரையில் அமையப்பெற்ற தாமிரபர்ணி நதியின் வடகரையில் ஸ்ரீ வைகுண்டமென்று வழங்கும் திருப்பதியின் வடபாலில் ஸ்ரீ கைலாசமென ஒருபகுதி உண்டு. அங்கே பரம்பரையாகத் தமிழ்ப் புலமையும் முருகக்கடவுளது பக்தியும் வாய்ந்த சைவவேளாள குலத்தில் சண்முக சிகாமணிக் கவிராயரென்ற ஒருவர் தம் மனைவியரான சிவகாமசுந்தரியம்மையாரோடு வாழ்ந்து வந்தார். அவ்விருவருக்கும் ஓர் ஆண் குழந்தை உதித்தது. அதற்குக் குமரகுருபரன் என்னும் பெயர் சூட்டி அவர்கள் வளர்த்து வருவாராயினர்.

குமரகுருபரர் ஐந்தாண்டு வரையிற் பேச்சின்றி ஊமைபோல இருந்து வந்தனர். அதுகண்டு நடுங்கிய பெற்றோர்கள் அவரைத் திருச்செந்தூருக்கு எடுத்துச் சென்று செந்திலாண்டவர் சந்நிதியிலே வளர்த்திவிட்டுத் தாமும் பாடுகிடந்தனர். முருகவேள் திருவருளால் குமரகுருபரர் பேசும் ஆற்றல்பெற்றுக் கல்வியிலும் சிறப்புற்றனர். செந்திற்பெருமான் திருவருளால் வாக்குப் பெற்ற இவர், அப்பெருமான் விஷயமாகக் கந்தர் கலிவெண்பா என்ற பிரபந்தத்தைப் பாடினார். அப்பால் தம் ஊரிலெழுந்தருளியுள்ள ஸ்ரீ கைலாசநாதர்மீது கைலைக் கலம்பகம் என ஒரு பிரபந்தம் இயற்றினார். இவருக்குக் குமாரசுவாமிக் கவிராயரென ஒரு தம்பியார் இருந்தனர்.

குமரகுருபரர் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் ஞானசாத்திரங்களையும் திருவருளால் விரைவில் கற்றுத் தேர்ந்தார்; மருவுக்கு வாசனை வாய்த்தாற்போன்று பக்தி ஞான வைராக்கியங்கள் இவரிடத்தே உண்டாகி வளரத் தொடங்கின. அப்பால் பல சிவ தலங்களுக்கும் சென்று சிவதரிசனம் செய்யத்தொடங்கினர். மதுரையிலே சில காலம் தங்கியிருந்தார். அப்போது ஸ்ரீ மீனாட்சியம்மையின் திறத்து ஒரு பிள்ளைத்தமிழ் பாடி அக்காலத்தில் மதுரையில் அரசாண்டிருந்த திருமலை நாயக்கர் முன்னிலையில் அரங்கேற்றினார்.

மும்மணிக்கோவை Download
கந்தர் கலிவெண்பா Download
காசிக் கலம்பகம் Download
மதுரைக் கலம்பகம் Download
மதுரை மீனாட்சி Download
நீதிநெறி Download
திருவாரூர் நான்மணிமாலை Download
சரஸ்வதி Download
Copyright 2017 © Reserved, Tamilnavarasam . Website designed by Glad India Technologies Pvt. Ltd.,