அயோத்திதாஸப் பண்டிதர்
அயோத்தி தாசர் (மே 20, 1845 - 1914; தமிழ்நாடு) ஒரு சாதிக்கொடுமை எதிர்ப்பாளர், சமூக சேவகர், தமிழ் அறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் இவர் ஒருவர். தலித் பின்புலத்தில் இருந்து வந்த இவர், 19 நூற்றாண்டின் இறுதியில் தலித் மக்களின் முன்றேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவரமாக செயற்பட்டார். அவரது இயற்பெயர் காத்தவராயன்.
தமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றண்டின் இறுதிப்பகுதியில் ஆதி தமிழர்கள், சாதியற்ற திராவிடர்களின் உரிமைகளைப் பற்றிப்பேசி வேத, பிராம்ணீயத்தை எதிர்த்து சாதி ஒழிப்பு, சுயமரியாதை, பகுத்தறிவு. பிரதிநித்துவம் போன்ற நவீன கருத்தாக்கங்களை உருவாக்கிய பண்டிதர் க அயோத்திதாசர் அவர்கள் தொடர்ந்து நடத்திய 'தமிழன்' வார இதழ் 104 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது.
க. அயோத்திதாசப் பண்டிதர் நவீன இந்தியா கண்ட மாபெரும் அறிஞர்களுள் ஒருவர். தென்னிந்திய சமூகப் புரட்சிக்கு வித்திட்டவர். தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கி வைத்தவர். அசோகருக்குப் பிறகு தமிழகத்தில் பௌத்த மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தவர். தலித் மக்களின் விடுதலையைத் தொடங்கி வைத்தவர். ‘தமிழன்’ என்ற அடையாளம் தந்தவர். இவரது கருத்துகள் ‘தமிழன்’ இதழ் மூலமும், ‘தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்கத்தின்’ மூலமும் தமிழ்நாடு, கோலார், மைசூர், ஐதராபாத், ரங்கோன், மலேசியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா எனப் பல்வேறு இடங்களுக்குப் பரவி ஒரு மாபெரும் இயக்கமாக வளர்ந்தது. அவரது அறிவு ஒளி, இன்றும் சமூகத்திற்கு வெளிச்சமாக இருக்கிறது.
ஒரு பைசாத் தமிழன் (தமிழன் (1907 -1914) பண்டிதர் க. அயோத்திதாசர் சுமார் 25 நூல்கள் 30 தொடர்கட்டுரைகள் 2 விரிவுரைகள், 12 சுவடிகளுக்கு உரை எழுதியவை தவிர அரசியல் கட்டுரைகள் கேள்வி பதில்கள் பகுத்தறிவுக் கட்டுரைகள் எனச் சில நூறு கட்டுரைகளை அவர் எழுதினார். தான் மறைவதற்கு ஒரு வருடம் முன்பு எழுதத் துவங்கிய திருக்குறள் உரையானது 55 அதிகாரங்களுடன் நின்று விட்டது. பண்டிதரின் மரணம் தான் அதற்குக் காரணம்.
அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்(1) |
Download
|
அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்(2) |
Download
|
அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்(3) |
Download
|
அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்(4) |
Download
|
அயோத்திதாஸப் பண்டிதர் நீதி |
Download
|
அயோத்திதாஸப் பண்டிதர் சொல்லாடல் |
Download
|