பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

கார்மேகக்கோனார்

கார்மேகக் கோனார் ராமநாதபுரம் மாவட்டத்தில் அபிராமம் அருகே அகதாரிருப்பு கிராமத்தில் ஆயர்பாடி கோனார் - இருளாயி அம்மாள் மகனாக டிசம்பர் 27,1889 இல் பிறந்தார். இவர் பிரபல தமிழ் கவிஞர் மற்றும் கல்வியாளர் ஆவார். செந்நாப் புலவர் என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்பட்டார், இவருக்கு இப்பெயரை அவரது நண்பர் பாரதிதாசன் வழங்கினார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 37 ஆண்டுகளாக தமிழ்த் துறை தலைவராக இருந்து வந்தார். இவரின் கீழ் ஆய்வு செய்த குறிப்பிடத்தக்க மாணவர்கள் பின்வருமாறு: சங்கரய்யா (சுதந்திர போராட்ட வீரர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ்நாடு மாநில செயலாளர்), வி. தில்லைநாயகம் (தமிழ்நாடு பொது நூலகக் துறை இயக்குநர்), கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் (நிலச் சீர்த்திருத்தப் போராட்டம்) மற்றும் கே.லட்சுமிகாந்தன் பாரதி (அரசு செயலாளர்) . இவர் சென்னை பல்கலைக்கழக பாடத்திட்டக் குழுமத்திற்கு தலைமையேற்றார்.

வாழ்க்கை வரலாறு

1904 - மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தில் மாணவராக சேர்ந்துள்ளார் 1912 - பண்டிதர் தேர்வில் வென்று தங்கப் பதக்கத்தினை வள்ளல் பாண்டித்துரைத் தேவரால் பெற்றார். 1912 இல் பத்மஷினி அம்மையாரை திருமணம் செய்து மதுரையில் வாழ்ந்தார்.1914 இல் மதுரை அமெரிக்கன் கல்லூரில் தமிழ்த்துறை தலைவராக பணியேற்றார்.1916 இல் பரிமேலழகர் கழகம் என்பதை தொடங்க்கினார்.மலைபடுகடாம் பற்றிய ஆராய்ச்சி கட்டுரையை 1920 இல் சமர்பித்தார்.1924 இல் இவரின் முதல் புத்தகம் நல்லிசைப் புலவர்கள் வெளிவந்தது.1927 இல் தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவில் இவரின் மதுரைக் காஞ்சி என்னும் நூலை வெளியிட்டார்.
1946 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் அரசு வேலை வாய்ப்புகள் துறையின் உறுப்பினராக சேர்ந்தார்.1951 இல் அமெரிக்கன் கல்லூரியிலிருந்து பணி ஓய்வு பெற்றார்.21.08.1955 அன்று ஐங்குறுநூறு பற்றிய விளக்கம் பல மணி நேரம் நிகழ்த்தப்பட்டது.22 அக்டோபர் 1957 அன்று சென்னையில் காலமானார்.

அறிவு நூல் திரட்டு 1 Download
அறிவு நூல் திரட்டு 2 Download
பால போத இலக்கியம் Download
ஜங்குறுநூறு சொற்பொழிவுகள் Download
இதிகாச கதாவாசகம் 1 Download
இதிகாச கதாவாசகம் 2 Download
செந்தமிழ் இலக்கிய திரட்டு Download
மதுரை தமிழ் சங்கம் Download
Copyright 2017 © Reserved, Tamilnavarasam . Website designed by Glad India Technologies Pvt. Ltd.,