பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

ஞா. தேவநேயப் பாவாணார்

திருநெல்வேலி, சங்கரன்கோவிலில் 7 வது பிப்ரவரி 1902 அன்று பெற்றோர் ஞானமுத்து தேவேந்திரர் - பரிபூரனம் அம்மையார் மகனாக பிறந்தார்.பாளையங்கோட்டை C.M.J. உயர்நிலை பள்ளியில் S.S.L.C. கல்வி பயின்றார். இவர் பல உயர் பள்ளிகளில் தமிழாசிரியராக பணியாற்றினார், 1930 ஆம் ஆண்டு திருமணம், நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள். 1922-1944 இந்த காலக்கட்டத்தில் அவர் திராவிட மொழி நூல் மற்றும் ஒப்பீட்டு மொழியியல் ஆய்வுகள் தொடர்ந்தார்.
இவர் 1944-1956 சேலம் மாநகர கல்லூரி தமிழ் பேராசிரியராக இருந்தார். 1956-1961 இருந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக இருந்ததார், அப்போது பள்ளி மற்றும் கல்லூரி பாடப்புத்தகங்கள் தயாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது

தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே
தமிழுயரத் தானுயர்வான் தான்.
- பாவாணர்
தன்னலம் சிறிதுமின்றி, குலமத வேறுபாடுகள் இவற்றையெல்லாம் கடந்து, தமிழுக்காகவும் தமிழினத்திற்காகவும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்த மொழிப் பேரறிஞர்தான் ‘மொழிஞாயிறு’ என்று அழைக்கப்படும் ஞா. தேவநேயப் பாவாணர்.
“தேவமொழியென்று ஏமாற்றித் தமிழ்நாட்டிற் புகுத்தப்பட்ட சமற்கிருதம் என்னும் வடமொழியாலேயே தமிழ்மொழி தாழ்ச்சியடைந்தது; அதனால் தமிழனும் தாழ்த்தப்பட்டான். எனவே, தமிழன் மீண்டும் முன்னேற வேண்டுமானால், தமிழ்மொழி வடமொழியினின்று விடுதலையடைதல் வேண்டும்” என்று எண்ணினார் பாவாணர். வடமொழியினின்று தமிழை மீட்பதே தமது வாழ்க்கைக் குறிக்கோளாகவும் கருதினார். தமிழ், தமிழர் நலம் காப்பதையே தமது உயிர் மூச்சாகக் கொண்டார்.
பாவாணர் ஏன் தமிழினத்தைக் காக்க முன்வந்தார் என்பதற்கான கரணியத்தைக் காண்போம். பாவாணர் ஒருமுறை திருப்பனந்தாள் மடத்திற்குச் சென்றிருந்தார். அங்குப் பாவாணரும் வேறு சில தமிழரும் விடுதித் தாழ்வார அறையில் தங்கியிருந்தனர். பிராமணர்க்கெல்லாம் தங்குவதற்கு உள்ளே அறைகள் கொடுக்கப்பட்டிருந்தது மல்லாமல், நண்பகல் உணவு பிராமணர்க்கு முதலில் பரிமாறப்பட்ட பின்னரே தமிழர்க்குப் பிற்பகல் மூன்று மணிக்குப் பரிமாறப்பட்டது. காலத்தாழ்வு ஏற்பட்டதைக் குறித்து வினவியபோது, அங்குள்ளோர் அப்போதுதான் பிராமணப் பந்தி முடிந்ததென்று தெரிவித்துள்ளனர். அப்போது, பாவாணர் தமிழர் குமுகாயம் அந்த அளவிற்குத் தாழ்ந்துபோன நிலை கண்டு, மிகுந்த வருத்தமடைந்திருக்கிறார். “நாடு தமிழ்நாடு; மடம் தமிழர் மடம்; சமயம் தமிழர் சமயம்; பணம் தமிழர் பணம்;” அங்ஙனமிருந்தும், தமிழன் நாய் போல் நடத்தப்படுவது இன்றும் தொடர்கின்ற தென்றால், தமிழனைப் பிராமண அடிமைத் தனத்திலிருந்து மீட்டே ஆக வேண்டுமென்று மனம் குமுறுகின்றார் பாவாணர். தமிழனை மீட்கும் பணியிலும் ஈடுபடுகின்றார்.
“தமிழை வடமொழியினின்றும் தமிழனை ஆரியனிடமிருந்தும் மீட்க வேண்டும். அதற்காகவே ஏறத்தாழ அறுபதாண்டு காலமாக மொழியாராய்ச்சியில் ஈடுபட்டார். தமிழ் திராவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் என்ற உண்மையை உலகறியச் செய்ய வேண்டும். இதற்கு மிகுந்த நெஞ்சுரமும் தற்சார்பு மனப்பான்மையும் வேண்டும். இவை பிறர்க்கு இல்லை. இதற்காகவே இறைவன் என்னைப் படைத்தார்” என்று உரைக்கின்றார் பாவாணர்.
1959 இல் தமிழ் அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி குழு உறுப்பினராகவும் 1974 இல் தமிழ் சொல்லிலக்கண திட்ட இயக்குனராக இருந்தார்.சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள மாவட்ட மைய நூலகத்திற்கு தேவநேய பாவாணர் நூலகம் என பெயரிடப்பட்டுள்ளது.
தனது வாழ்க்கை வரலாற்றில்,பல விருதுகளை பெற்றார் அவற்றில் ஒன்று வெண்பாவில் கவிதைகள் இயற்றியதற்காக 'செந்தமிழ் செல்வர்'விருது 1979 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் பெயரன் திரு. இம்மானுவேல் தேவநேயன் ஆவார்.

தமிழ் வரலாறு Download
தமிழ்நாட்டு விளையாட்டு Download
Copyright 2017 © Reserved, Tamilnavarasam . Website designed by Glad India Technologies Pvt. Ltd.,