சிதம்பரநாதன் செட்டியார்
சிதம்பரநாதன் செட்டியார் (ஏப்ரல் 3,1907 - நவம்பர் 22, 1967) கும்பகோணத்தில், அமிர்தலிங்கம் - பார்வதி என்பவருக்குப் பிறந்தார்.தமிழிலும்,ஆங்கிலத்திலும் புலமை பெற்ற இத்தமிழ் அறிஞர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். 1943ஆம் ஆண்டு "தமிழ்ச் செய்யுள் வரலாறு" என்ற தலைப்பில் ஆய்வு செய்து, முனைவர் பட்டத்தை முதன்முதலில் பெற்ற சிறப்புக்குரிய தமிழறிஞர் ஆவார்.
‘An Introduction To Tamil Poetry' -தமிழ்க் காப்பியங்களின் சிறப்பினை நிலைநாட்டிய நூலை, சிலப்பதிகாரத்தினையும் அடிப்படையாகக் கொண்டு எழுதினார். சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் ஏ.இலட்சுமணசாமி முதலியாரின் வேண்டுகோளுக்கிணங்க, "ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியம்" எனும் அரிய நூலுக்குத் தலைமைப் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றுத் திறம்பட, 1959ஆம் ஆண்டு முதல் 1965 வரைப் பணியாற்றினார்.