பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

சி.பி.சிற்றரசு

பெத்தசாமி நாயுடு மற்றும் லட்சுமி அம்மாள் தம்பதியருக்கு மகனாக செப்டம்பர் 4, 1908 இல் காஞ்சிபுரத்தில் பிறந்தார். இவருக்கு பெற்றோர் சின்னராஜ் என பெயரிட்டனர். இவர் 1930 இல் நீதிக்கட்சி சேர்ந்தார். முதல்வர் அண்ணா-வின் நண்பராக இருந்தார்.1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) அமைப்பை உருவாக்க திராவிடர் கழகம் (ஜஸ்டிஸ் கட்சி வழித்தோன்றல்) விட்டு வெளியேறிய போது, சிற்றரசு அவர்களும் அவரை தொடர்ந்து வெளியேறினார். இவர் திமுக முன்னணி பேச்சாளர்களில் ஒருவராவார். சிறந்த அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர்.
திமுக பொதுக்குழு உறுப்பினராக இருந்தார், அதன் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் நம்நாடு- ன் ஆசிரியரும் ஆவார். பொதுத்தேர்தலில் 1957ல் திருப்பத்தூர் தொகுதி மற்றும் 1962 ல் துறைமுகம் தொகுதியிலும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு மேலவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970-76 ன் போது தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் தலைவராக இருந்தார். 1976 ஆம் ஆண்டு திமுக விட்டு விலகி எம். ஜி. ஆர்- இடம் அதிமுக வில் சேர்ந்த நிலையில் தொடர்ந்தார். இலக்கியத்தில் சிந்தனை சிற்பி என செல்லப்பெயர் பெற்றார். பிப்ரவரி 16, 1978ல் மறைந்தார்.

சரிந்த சாம்ராஜியங்கள் Download
உலக விஞ்ஞானிகள் Download
உலகைத் திருத்திய உத்தமர்கள் Download
மதி ( நாடகம் ) Download
வெங்கலச் சிலை Download
விஷக் கோப்பை Download
Copyright 2017 © Reserved, Tamilnavarasam . Website designed by Glad India Technologies Pvt. Ltd.,