டாக்டர்.சி.பாலசுப்பிரமணியன்
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சியில் 03-05-1935 ல் பிறந்தவர்.கண்டாச்சிபுரம் மற்றும் திருவண்ணாமலையில் பள்ளிப் படிப்பை முடித்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை தமிழ் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். குறுந்தொகை பற்றிய ஆய்வுரைக்கு 1963ல் எம்.லிட் பட்டமும்,சேரநாட்டு செந்தமிழ் இலக்கியங்கள் பற்றிய ஆய்வுரைக்கு 1970ல் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை தலைவராகவும்,தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகவும் பணிபுரிந்துள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். இவரது படைப்புகளில் தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூல் ஒன்றே சான்றாகும்.
சி.பா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பெறும் இவர் மு.வரதராசனாரின் செல்லப்பிள்ளை. இவரது இலக்கியப் பேச்சு ஓர் அருவியில் நீர் கொட்டுவதுபோல் இருக்கும் என்பது மிகையாகாது.