கடினமாக உழை, உன் லட்சியத்தில் வெற்றி அடைவாய்.
- சுவாமி விவேகானந்தர்.
"தமிழ் மொழியைக் கற்கும்போது அதன் அழகை அறியலானேன்"
-தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் கூறிய கருத்து
'தமிழ் மொழியைக் கற்கும்போது அதன் அழகை அறியலானேன்' என தென்னாபிரிக்காவில் காந்தியடிகள் தமிழ் மொழியை கற்க ஆரம்பித்தபோது கூறியுள்ளார். மேலும் அவர், 'தமிழ் மொழி உள்ளம் கவரும் ஒர் இனிய மொழி' எனறும் கூறியுள்ளார்.
மகாத்மா காந்தியடிகள் தமிழ் கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டதற்கு காரணம் திருக்குறள். தமிழ் மொழி குறித்து காந்தியடிகள் கூறுகையில், நான் திருக்குறளின் மூலத்தை நேராக கற்க வேண்டுமென ஆசைப்பட்டேன். இது, எனது மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. எனவே, தமிழ் கற்க ஆரம்பித்தேன்' எனக் கூறியுள்ளர்.
இந்தியா ஒன்றுபடுவதற்கு தமிழர்கள் இந்தி மொழியை கற்பது மட்டும் போதாது. சென்னை ராஜ்யத்திற்கு வடக்கே உள்ளவர்களும் தமிழை தெரிந்துகொள்ள வேண்டும் என்பது காந்தியின் கருத்து.
'மகாத்மா' என்ற பட்டம் குறித்து காந்தியடிகள் கூறுகையில், 'மகாத்மா என்னும் பட்டத்தை நான் மதிக்கவில்லை. பல சமயம் இப்பட்டம் எனக்கு மனத்துன்பத்தை தந்துள்ளது. எக்காலத்திலும் அப்பட்டத்தினால் நான் பெருமைப்பட்டுக் கொண்டதாக ஞாபகமில்லை. என்னை மகாத்மா எனக் கூறி பனிப்பாங்கான இமயமலையின் சிகரம் வரை ஏற்றி வைத்துவிட்டு, இவ்வளவு மாபெரும் மகாத்மாவின் போதனைகளைப் பின்பற்றுவது என்ன முடிகிறகாரியமா எனக்கூறி என் காலை வாரி விடப்பார்க்கிறீர்களா... பொருட்காட்சி சாலையில் வைத்துள்ள ஒரு ஜந்துவின் நிலையில் தான் உள்ளேன்' எனத் தெரிவித்துள்ளார்.
பாவேந்தர் பாரதிதாசன்
பிறப்பு
பாவேந்தர் பாரதிதாசன்
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தென்னிந்தியாவில் இருக்கும் புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார்.
மேலும் பல