பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

கலாம் உங்களுக்கு சலாம்

1931 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாகவும் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் பாம்பன் தீவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தாலும் இந்தியாவின் சாதனையாளர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் ...

»» இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி,தொழில்நுட்ப வல்லுநர்

»» மிகப்பெரிய பொறியியளாலர்

»» இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர்

»» இந்திய ஏவுகணை நாயகன்

»» இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை

»» அனைத்து வயது மாணவர்களுக்கும் மிகச்சிறந்த ஆசிரியர்

»» அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர்

»» எதிர்கால இளைஞர்களின் எழுச்சி நாயகன், கனவு நாயகன்

என்று பல புனைப்பெயர்களுக்கு சொந்தக்காரர்.

அவரது உழைப்பை பாராட்டி வழங்கப்பட்ட விருதுகள் பல

»» 1981 ம் ஆண்டில் பத்ம பூஷன்

»» 1990 ம் ஆண்டில் பத்ம விபூஷன்

»» 1997 ம் ஆண்டில் பாரத ரத்னா

»» 1997 ம் ஆண்டில் தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

»» 1998 ம் ஆண்டில் வீர் சவர்கார் விருது

»» 2000 ம் ஆண்டில் ராமானுஜன் விருது

»» 2009 ம் ஆண்டில் சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது

»» 2009 ம் ஆண்டில் ஹூவர் மெடல்

»» 2012 ம் ஆண்டில் சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

அவர் கஷ்டங்களை கடந்து பெற்ற பட்டங்கள் பல

»» 2007ம் ஆண்டில் அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்

»» 2007 ம் ஆண்டில் கிங் சார்லஸ்-II பட்டம்

»» 2008 ம் ஆண்டில் பொறியியல் டாக்டர் பட்டம்

»» 2010 ம் ஆண்டில் பொறியியல் டாக்டர் பட்டம்

»» 2012 ம் ஆண்டில் சட்டங்களின் டாக்டர் பட்டம்

ஏராளமான விருதுகளும் பல பட்டங்களும் பெற்ற போதும் இந்திய அரசு மாளிகையில் பல ஆண்டு காலம் வாழ்ந்த போதும் தன் ஏழ்மை நிலையில் இருந்து கடைசிவரை வாழ்ந்து காட்டியவர்

எழுத்துலகினில் அவரின் படைப்புக்கள் பல

அக்னி சிறகுகள்,இந்தியா 2020,எழுச்சி தீபங்கள், அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை என்று பல நூல்களை எழுதி அவைகளின் மூலமும் இளைஞர்களின் மனதில் எழுச்சியை தூண்டி விட்டவர்.

»» கடைசி வரை பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து நாட்டின் நன்மைக்காக உழைத்தவர்..

»» தனக்கென்று ஒரு வீடு கூட அமைத்துக்கொள்ளாதவர்..

»» யாரிடமும் எந்த பொருளும் பரிசாக பெற்றுக்கொள்ளாதவர்..

»» எந்த சூழ்நிலையில் எங்கு வாழ்ந்தாலும் தன் குணம் மாறாத உன்னதமான மாமனிதர்..

»» கனவு காணுங்கள் அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள் என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்யும் படி வாழ்ந்து காட்டியவர்..

»» இப்படி உலகிற்க்கு ஒரு தனிமனிதனாக இளைய தலைமுறைக்கு முன் மாதிரியாக வாழ்ந்தவர்..

»» ஜூலை 27, 2015 ஆம் நாளில் ஷில்லாங்கில் உள்ள இன்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் மாணவர்கள் மத்தியில் மாணவர்களுக்காக பேசிக்கொண்டிருந்தபோதே அவரை படைத்தவன் அழைத்துக்கொண்டான்.

மாணவர்களுக்காகவே வாழ்ந்து மாணவர்களுடனே தன் உயிர் பிரிந்தார்.

»» சரித்திர நாயகனே,

»» சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு விண்கலம் பூமிக்கு கீழே ஏவப்பட்டது!!

"பிறப்பது ஒரு சம்பவமாக இருக்கலாம்- ஆனால்
இறப்பது ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்..."

என்கின்ற தன் வரிகளுக்கு உதாரணமாக தன் வாழ்க்கையை வாழ்ந்து தன் மரணத்தை கூட சரித்திரமாக்கியவர் எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் ...

"காந்தியடிகள் எங்களுக்கு தாத்தா என்றால்
நேரு எங்களுக்கு மாமா என்றால்
எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் எங்களுக்கு தந்தை ..."

எங்களுக்குள் உங்கள் கனவை விதையாக விதைக்கப்பட்டுள்ளீர்கள்.

காலம் எல்லாம் கலாம்

"அழைக்கலாம்,அணுகலாம்,அளிக்கலாம்,அடிக்கலாம்,அறிவிக்கலாம்,அதிகரிக்கலாம்,
அழிக்கலாம்,அமைக்கலாம்,அரைக்கலாம்,அனுமதிக்கலாம்,அறுக்கலாம்,
அசைக்கலாம்,அடைக்கலாம்,அடுக்கலாம்,ஆக்கலாம்,ஆரம்பிக்கலாம்,இருக்கலாம்,
இணைக்கலாம்,இசைக்கலாம்,இறங்கலாம்,இறக்கலாம்,இயக்கலாம்,இழுக்கலாம்,
உழைக்கலாம்,உருவாகலாம்,உடுக்கலாம்,உருகலாம்,உரிக்கலாம்,உள்ளடக்கலாம்,
உண்டாக்கலாம்,உதிர்க்கலாம்,உதிக்கலாம்,உரைக்கலாம்,உடைக்கலாம்,உறங்கலாம்,
எடுக்கலாம்,ஏற்கலாம்,ஒழிக்கலாம்,கற்கலாம்,கற்பிக்கலாம்,கவனிக்கலாம்,
கண்டிக்கலாம்,கலக்கலாம்,கலைக்கலாம்,களிக்கலாம்,கரைக்கலாம்,காக்கலாம்,
காண்பிக்கலாம்,காய்க்கலாம்,கிழிக்கலாம்,கிடைக்கலாம்,குறிக்கலாம்,குளிக்கலாம்,
கேட்கலாம்,சமைக்கலாம்,சாதிக்கலாம்,சாகலாம்,சாய்க்கலாம்,சிறக்கலாம்,சிரிக்கலாம்,
சிவக்கலாம்,சுருக்கலாம்,சுமக்கலாம்,சுவைக்கலாம்,செதுக்கலாம்,சேமிக்கலாம்,
தடுக்கலாம்,தயாரிக்கலாம்,தரிசிக்கலாம்,தாக்கலாம்,தாங்கலாம்,திறக்கலாம்,
திருகலாம்,திணிக்கலாம்,தியானிக்கலாம்,தீர்க்கலாம்,துவைக்கலாம்,துடிக்கலாம்,
துளிர்க்கலாம்,துறக்கலாம்,துடைக்கலாம்,துண்டிக்கலாம்,துவங்கலாம்,தூங்கலாம்,
தேக்கலாம்,தேய்க்கலாம்,தைக்கலாம்,தொலைக்கலாம்,தொடுக்கலாம்,தொங்கலாம்,
நடக்கலாம்,நடிக்கலாம்,நிற்கலாம்,நிராகரிக்கலாம்,நினைக்கலாம்,நியமிக்கலாம்,
நேசிக்கலாம்,நோக்கலாம்,படிக்கலாம்,பதிக்கலாம்,பழிக்கலாம்,படுக்கலாம்,
பயணிக்கலாம்,படைக்கலாம்,பறக்கலாம்,பங்கேற்கலாம்,பசிக்கலாம்,பரிசளிக்கலாம்,
பார்க்கலாம்,பாதுகாக்கலாம்,பிறக்கலாம்,பிரிக்கலாம்,பிடுங்கலாம்,பிடிக்கலாம்,
பொறிக்கலாம்,போகலாம்,போக்கலாம்,மதிக்கலாம்,மயக்கலாம்,மடிக்கலாம்,
மன்னிக்கலாம்,மறிக்கலாம்,மறுக்கலாம்,மறைக்கலாம்,மணக்கலாம்,மாய்க்கலாம்,
முடிக்கலாம்,முறுக்கலாம்,முக்கலாம்,முழங்கலாம்,முனகலாம்,ரசிக்கலாம்,ருசிக்கலாம்,
வகுக்கலாம்,வடிக்கலாம்,வழங்கலாம்,வளர்க்கலாம்,வறுக்கலாம்,வல்லரசாக்கலாம்,
வாங்கலாம்,விடுக்கலாம்,விழிக்கலாம்,விதைக்கலாம்,வியர்க்கலாம்,விதிக்கலாம்,
வெறுக்கலாம்,வெளுக்கலாம்,வெளியாகலாம்,வேகலாம்,வைக்கலாம்............."

மொத்தத்தில் உதிக்கலாம்…………... பிறக்கலாம்…………… வளர்க்கலாம்…………… மதிக்கலாம்…………. சாதிக்கலாம்…………… ஜெயிக்கலாம்……………. சிறக்கலாம்…………….. பறக்கலாம்……………. புதைக்கலாம்………..

டாக்டர்.அப்துல் கலாம் அவர்கள் காற்றோடு கலந்துவிட்ட போதிலும் நம் ஒவ்வொருவரின் நாவிலும் தினந்தோறும் " கலாம் " என்ற சொல்லை மேற்குறிப்பிட்ட ஏதேனும் வார்த்தைகளில் என்றும் உச்சரித்துக்கொண்டுதான் இருப்போம்.

குறிப்பு : பெரும்பாலான வினைசொல்லுடன் --------கலாம் என வருவதுவே தமிழின்

( கலாமின் ) சிறப்பு.
Copyright 2017 © Reserved, Tamilnavarasam . Website designed by Glad India Technologies Pvt. Ltd.,